Showing posts with label Prakash raj. Show all posts
Showing posts with label Prakash raj. Show all posts

Friday, March 11, 2011

Payanam :)

Based on repeated request from the followers, here is the review of payanam in tamizh.:) courtesy again.. Miss.Aishwarya Govindarajan

ராதாமோகனின் "அழகிய தீயே!" பார்த்த பொழுது "ஆஹா!படம் அழகாக இருக்கிறது!" என்று உணர்ந்தேன்(அப்படம் தெலுங்கில் உள்ளது என்று அப்பொழுது எனக்குத் தெரிந்திருக்கவில்லை)."பொன்னியின் செல்வன்",பெயர் என்னை ஈர்த்த பொழுதும் படம் என்னை ஏதும் ஈர்க்கவில்லை."மொழி",இசையும் மௌனமும், உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தைகளிலும், பாடல் வரிகளிலும் எனப் பலதை உணரவைத்து ஒரு பரிபூரணம் போல் எனக்குத் தோன்றியது."அபியும் நானும்",பத்து மாதங்கள் தாய் சுமந்தாலும்,தந்தை என்பவன் தன் வாழ்வின் எல்லைவரை தன்னுள் தன் மகளை தன் தாயாகவே சுமக்கிறான் என்ற உண்மையை அழகாகச் செதுக்கிக் கூறிய படம்.அவ்வரிசையில் இதோ "பயணம்",கார்கியின் அர்த்தம் மிகப்பொதிந்த பாடல் வரிகளில் துவங்குகிறது படத்தின் பயணம்.காட்சிகளுக்கு காட்சி வசனங்கள் அருமை என்று கூறுவதை விட வசனங்களே இப்பயணத்திற்கு பலம் எனலாம்.உதாரணங்கள்: குழந்தையும் தீவிரவாதிக்கும் இடையேயான உரையாடல்,நாகர்ஜுனாவிர்க்கும் பிரகாஷ்ராஜிருக்கும் இடையேயான தீவிரவாதியை விடுவிப்பது பற்றியான உரையாடல்.வேலை தேடுபவனுக்கும் ஜோசியக்காரனுக்கும் இடையேயான நகைச்சுவையூடே சிந்திக்கத்தூண்டும் உரையாடல்,ஹீரோவிற்கும் அவனை அனைத்துமாக நம்பும் ரசிகனுக்கும் இடையேயான உரையாடல் என ஒவ்வொரு பகுதியும் ஏதோ ஒரு விதத்தில் நறுக்கென்று சொல்லவந்ததை மனதில் தைக்கிறது.குழந்தையிலிருந்து பாதிரியார் வரை ஒவ்வொரு முக்கிய பாத்திரமும் செதுக்கப்பட்டிருக்கிறது.பாஸ்கரின் பாத்திரமும்,பிரகாஷ்ராஜ் பாத்திரமும், இளங்கோ குமாரவேலின் பாத்திரமும் பற்றி பலவே பேசலாம் ஆனால் பேசினால் படத்தின் முழுக்கதையையும் விவாதிக்கும்படி ஆகிவிடும்.இதை ஒரு தீவிரவாதம் பற்றிய படம் என்று பார்க்காமல்,மனித மனத்தின் ஆழத்தை படிக்கும் படம் என்ற ரீதியில் அணுகலாம்.ஒவ்வொரு மனிதமும் தன்னை சுற்றி நடக்கும் அனைத்தையும் முதலில் தன் பார்வையிலிருந்தே பார்க்கிறது பிறகுதான் அது சுற்றம்/மற்றவர் எனும் பார்வையிலிருந்து பார்க்கிறது,தான் செய்வது தவறு என்று உணராதவன் பிறர் செய்யக் கண்டதும் அவன் கண்களை அது உறுத்துவது,உயர் அதிகாரியில் தொடங்கி இதற்கு ஒரு தீவிரவாதி என்பவன் கூட விதிவிலக்கல்ல அவனும் அவ்விடத்தில் மனிதனே என்பதையும் காண்பிக்கிறது படம்,அதை திரையில் சொன்ன விதம் நன்று.சாதாரண விஜயகாந்த் படத்தில் ஹீரோவை நியாயமாகக் காட்டி பக்கம் பக்கமாக வசனங்கள் பேசவைத்து நம் காதுகளை கிழிப்பது போல் அல்லாமல்,வசனங்கள் முன்பு சொன்னது போல் நறுக்கென்று சென்று மனதின் ஆழத்தைக் கிழிக்கிறது பல இடங்களில்,ராதாமோகனுக்கு இதற்கு ஒரு சலாம்.பிரகாஷ்ராஜின் டூயட் மூவீஸ் ஒரு மௌனத்தை "மொழி" வாயிலாகப் பேசியது எனில்.சைலன்ட் மூவீஸ் வழியாக வார்த்தைகளால் பேசி நம்மை மௌனிக்க வைக்கிறது .இவர்களின் வெற்றிக் கூட்டணித் தொடர வாழ்த்துக்கள்.இவ்வளவு இருந்தும் நாகர்ஜுனா முதலில் தோன்றும் காட்சியையும் இறுதிக்காட்சியையும் ஸ்லொவ் மோஷனில் காண்பித்து திடீரென்று படத்தை ஒரு சாதாரண ஒன் மேன் சப்ஜக்ட் போல் காண்பித்துவிட்டார் ராதாமோகன்.நாகர்ஜுனா மாஸ் ஹீரோ என்பதால் தனக்கு ஹைப் தேவை என்று கேட்டிருப்பாரோ?,தெரியவில்லை.இயக்குனரே மிக அழகாய் செதுக்கி இருக்க எடிட்டிங் பணி சிறிதுதான் தேவைபட்டிருக்கும் என நினைக்கிறேன்.மொத்தத்தில் பயணம்- ஓட்டுனர் ஒரு சில இடங்களில் திடீரென்று சிறிதே நிலை தடுமாறியதைத் தவிர்த்து இது ஒரு நல்ல அனுபவம் தரும் பயணம்,பயணித்த/பயணிக்கும் அனைவருக்கும்.